EDUCATION ENVIRONMENT EMPOWER
ABOUT US
VIP TRUST
கிராம முன்னேற்ற தூண்கள் அறக்கட்டளை
(Village Improvement Pillaers Turst)
வணக்கம்.
திண்டுக்கல் மாவட்டம். வேடசந்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட எருதப்பன்பட்டி எனும் கிராமத்திலுள்ள இளைஞர்களால் 30.08.2015 ல் கிராம மற்றும் நகர்புற மக்களின் வளர்ச்சிக்காகவும் அம்மக்களின் அடிப்படை கல்வி அறிவு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சுற்றுசூழலை உருவாக்குதல். அனைவருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுபடுத்துவது என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டதே இந்த 'கிராம முன்னேற்ற தூண்கள் அறக்கட்டளை".
Vision
-
அனைவருக்கும் கல்வி
-
பாதுகாப்புடன் கூடிய ஆரோக்கியமான சுற்றுசூழல்
-
அனைவருக்கும் வேலைவாய்ப்பு
Mission
-
ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்குதல் மற்றும் கல்வியில் சிறந்து விளங்;கும் மாணவர்களை ஊக்குவித்தல் மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக ஆசிரியரை நியமித்து
-
சிறப்பு வகுப்புகள் நடத்துதல்.
-
வேலைவாய்ப்புக்கான அடிப்படை பயிற்சியினை வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குதல்.
-
ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சுற்றுசூழலை உருவாக்க கீழ்கண்ட நடவடிக்கைகளை மெற்கொள்வது.
1.ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அதனை பாதுகாப்பாக வளர்ப்பது
2.சுற்றுசூழலுக்கு தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை படிப்படியாக குறைப்பது.
3.வீடுகள் மற்றும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பை அமைக்க உதவுவது மற்றும் அதனை ஊக்குவிப்பது.
4.சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மரங்களை அழிப்பது.
5.அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி. சுற்றுசூழல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு தேவையான விழிப்புணர்வினை
தொடர்ந்து ஏற்படுத்துதல்.
இந்த சிறப்பான செயல்கள் அனைத்தும் செவ்வனே நிறைவேற கிராம முன்னேற்ற தூண்கள் அறக்கட்டளைக்கு
கைகொடுத்து வளமான சமூகத்தை உருவாக்க ஓன்றிணைந்திடுவீர்.
நன்றி....
இங்கனம்,
கிராம முன்னேற்ற தூண்கள் அறக்கட்டளை.
எருதப்பன்பட்டி.

OUR ADDRESS
Find us:
VIP Trust, Regd No: 3/BK4/2015, Eruthappanpattty, Achanampatty post, Vedasandur Taluk, Dindigul -624702.
E-Mail : viptrustepty@gmail.com
Call us:
+91 9003888162
+91 9944346826
+91 9655414440
+91 9840567675
+91 9600872726